நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டு அலுவலகர்கள் வேகவேகமாக வீடு சென்று கொண்டிருக்கின்றனர்.
இன்றும், நாளையும் திரையரங்குகள் மூடப்படும் என்றும், சினிமா நிகழ்ச்சிகள், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்றும் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற திட்டமிட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளதை அடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. அசாதாரண நிலையை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com