அரசுப்பேருந்தில் திடீர் தீ விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 40 பயணிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேல்மருவத்தூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து 40 பயணிகளுடன் சென்னை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அங்கு பயணிகள் ஏறிக்கொண்டும் இறங்கி கொண்டும் இருந்த நிலையில் திடீரென பேருந்து எஞ்சினில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக பயணிகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறங்கச் சொல்லி அறிவுறுத்தினார். பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் பேருந்தை சற்று தள்ளி நிறுத்துவதற்காக மீண்டும் பேருந்தை ஸ்டார்ட் செய்தார். அந்த சமயத்தில் திடீரென பேருந்தில் தீப்பிடித்து மளமளவென பேருந்து முழுவதும் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஓட்டுனர் முன்கூட்டியே பயணிகளை இறங்க சொல்லி அறிவுறுத்தியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments