ஓடும் பேருந்தில் மாரடைப்பு: உயிர் போகும் தருவாயிலும் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்!

  • IndiaGlitz, [Sunday,July 11 2021]

ஈரோடு மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிர் போகும் தருவாயில் பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கவுந்தப்பாடியில் இருந்து பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தை அவர் ஓட்டி சென்றபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தனது வலியையும் பொருட்படுத்தாது உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தார். இந்நிலையில் அவரை பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. தனக்கு மாரடைப்பு வந்தபோதும் பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த ஓட்டுனர் செல்வராஜ் அவர்களின் செய்கையால் பயணிகள் பெரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

More News

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கு இசையால் வாழ்த்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது என்பதும் இந்த போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

6 மணிக்கு சர்ப்ரைஸ் இருக்கு: 'வலிமை' நடிகரே டுவிட் செய்ததால் பரபரப்பு!

தல அஜித் நடித்த 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியானதை அடுத்து 'வலிமை' மோஷன் போஸ்டர் குறித்த

பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்த முதல்வர்: மாணவர்கள் உற்சாகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுவை மாநில முதல்வர்

திருப்பதியில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை: நடிகை நமீதா பேட்டி!

திருப்பதிக்கு கணவருடன் சுவாமி தரிசனம் செய்யச் சென்றிருந்த நடிகை நமீதா, திருப்பதியில் தரிசன ஏற்பாடுகள் சரியில்லை என குற்றம் சாட்டியுள்ளார். 

விஜய்காந்த் வீட்டிற்கே சென்று இன்ப அதிர்ச்சி முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது உடல் நலம் விசாரித்தது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.