ஓடும் பேருந்தில் மாரடைப்பு: உயிர் போகும் தருவாயிலும் பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்!

  • IndiaGlitz, [Sunday,July 11 2021]

ஈரோடு மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிர் போகும் தருவாயில் பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கவுந்தப்பாடியில் இருந்து பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தை அவர் ஓட்டி சென்றபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தனது வலியையும் பொருட்படுத்தாது உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தார். இந்நிலையில் அவரை பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. தனக்கு மாரடைப்பு வந்தபோதும் பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த ஓட்டுனர் செல்வராஜ் அவர்களின் செய்கையால் பயணிகள் பெரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.