பிறந்தநாளன்று நடிகர் கவுண்டமணி பதிவிட்ட டுவீட்...! முக்கிய பிரச்சனை பத்திதான்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, முக்கிய டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நேற்றுமுதல் பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தான் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆசிரியரே தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம், தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைதான ராஜகோபாலன் தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். வருகின்ற 8-ஆம் தேதி, நீதிமன்ற காவலில் கொடூர நெஞ்சம் படைத்த காமுகனை ஒப்படைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணி அவர்கள் இதுகுறித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "பள்ளியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
கவுண்டமணி அவர்கள் பெரும்பாலாக பொதுநிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் கலந்து கொள்ள விரும்பமாட்டார். பெரிய ஸ்டார் என்று பந்தா காட்டாமல் எதார்த்தமாகவே இருப்பார். அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து, கருத்துக்கள் பதிவிட்டு வருவார்.
அண்மையில் தான் மக்களுக்காக "கொரோனா வைரஸ் சாதாரண நோய் இல்லை. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் பார்க்கிறேன் என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவசரமாக இருந்தால் மட்டுமே வெளியே வாருங்கள்" என்ற உருக்கமான டுவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று தனது 81-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கவுண்டமணி அவர்கள் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக டுவிட் போட்டிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
#PSBB பள்ளியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.@mkstalin @arivalayam
— Goundamani (@itisGoundamani) May 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments