close
Choose your channels

'ஒத்த ஓட்டு' படத்தில் கவுண்டமணிக்கு இத்தனை கேரக்டரா? செம்ம ரீஎண்ட்ரி தான்..!

Thursday, August 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ’ஒத்த ஓட்டு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கவுண்டமணியின் பல திரைப்படங்களுக்கு காமெடி வசனம் எழுதிய சாய் ராஜகோபால் என்பவர் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ ’கிச்சா வயது 16’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் கவுண்டமணி மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நல்ல அரசியல்வாதி, கெட்ட அரசியல்வாதி மற்றும் சாதாரண பொதுஜனம் என மூன்று வேடங்களில் நடிப்பதாகவும் மூன்று வேடங்களிலும் அவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம்புலி, முத்துக்காளை, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment