'ஒத்த ஓட்டு' படத்தில் கவுண்டமணிக்கு இத்தனை கேரக்டரா? செம்ம ரீஎண்ட்ரி தான்..!

  • IndiaGlitz, [Thursday,August 31 2023]

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ’ஒத்த ஓட்டு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கவுண்டமணியின் பல திரைப்படங்களுக்கு காமெடி வசனம் எழுதிய சாய் ராஜகோபால் என்பவர் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ ’கிச்சா வயது 16’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் கவுண்டமணி மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நல்ல அரசியல்வாதி, கெட்ட அரசியல்வாதி மற்றும் சாதாரண பொதுஜனம் என மூன்று வேடங்களில் நடிப்பதாகவும் மூன்று வேடங்களிலும் அவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம்புலி, முத்துக்காளை, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணையும் 'லியோ' வில்லன்.. மாஸ் தகவல்..!

அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் நிச்சயம் உருவாகும் என்று சமீபத்தில் பல்வேறு விதமான வதந்திக்கு  லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் முற்றுப்புள்ளி வைத்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட

பாலி தீவு அருவியில் ஆனந்த குளியல்.. பொன்னியின் செல்வன் நடிகையின் வீடியோ வைரல்..!

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்குள்ள அருவியில் ஆனந்த குளியல் போட்ட

இந்த சீசன் இரண்டு வீடுகள் மட்டுமல்ல, இதுவும் இரண்டு தான்.. களைகட்டும் பிக்பாஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 7வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமாண்டத்தின் உச்சம்.. பிரமிக்கும் ஆக்சன் காட்சிகள்: அட்லியின் 'ஜவான்' டிரைலர்..!

 ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது

சிலந்தி வலையை அறுக்க சிங்கங்கள் வாழாது.. கவினின் 'ஸ்டார்' படத்தின் செம்ம வீடியோ..!

நடிகர் கவின் நடித்து வரும் 'ஸ்டார்' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.