கவுண்டமணி படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,April 15 2016]

கடந்த 1990கள், மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் நம்பர் ஒன் காமெடி நடிகராக கோலிவுட்டில் வலம் வந்த நடிகர் கவுண்டமணி இடையில் சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு கவுண்டமணி ஹீரோவாக நடித்த '49ஓ' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் ஹீரோவாக நடித்த இன்னொரு படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.


'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் கவுண்டமணி நடித்துள்ளார். கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் கவுண்டமணி சினிமா கம்பெனிகளுக்கு கேரவேன்களை வாடகைக்கு விடும் கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றும் சமூக இணையதளங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.