இந்தி எதிர்ப்பை புத்திசாலித்தனமான புரமோஷனில் காட்டிய 'கொரில்லா' படக்குழு
- IndiaGlitz, [Sunday,June 02 2019]
தேர்தல் முடிந்துவிட்டதால் அரசியல்வாதிகளுக்கு போராட்டம் செய்யவும், அறிக்கை விடவும் காரணம் இன்றி தவித்த நிலையில் அவர்களுக்கு கைகொடுத்த விவகாரம் தான் இந்தி திணிப்பு. அரசியல் தலைவர்களின் குழந்தைகள் அனைவரும் இந்தி படிப்பார்கள். ஆனால் பொதுமக்களை மட்டும் படிக்க விடமாட்டார்கள். கேட்டால், தமிழ் மொழியின் பற்று என்றும் கூறுவதும் உண்டு. இந்தி மொழி வேண்டுமா? வேண்டாமா? என்பதை படிக்கும் மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் முடிவு செய்து கொள்வார்கள். இதில் அரசியல் தலைவர்கள் தலையிட வேண்டாம் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் இந்தி எதிர்ப்பு உணர்வு தமிழகம் முழுவதும் நேற்று முதல் கொந்தளித்து வரும் நிலையில் இந்த பிரச்சனையை ஜீவாவின் 'கொரில்லா' படக்குழுவினர் தங்களது புரமோஷனில் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியுள்ளனர். 'கொரில்லா' என்ற இந்தி எழுத்தை குரங்கு அழிப்பதை போன்று ஒரு போஸ்டரை பதிவு செய்துள்ளனர். சரியான நேரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த புரமோஷன் மக்களை நன்றாக ரீச் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள 'கொரில்லா' திரைப்படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் குருதேவ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஜூன் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளது.