அசோக்குமாரிடம் எந்தவித பண வரவு-செலவும் இல்லை: கோபுரம் பிலிம்ஸ் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,November 22 2017]

சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் இதுகுறித்து ஒரு விளக்க அறிக்கையை கொடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.

இன்றைய நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகளில் திரு அசோக்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டு அவர் ஒரு கடிதம் எழுதி வைத்ததாகவும், அதில் சில வார்த்தைகள் எழுதி வைத்துள்ளதாகவும் செய்திகளில் வெளிவந்துள்ளது. அசோக்குமார் என்பவர் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் அவர் எழுதி வைத்ததுதானா? அசோக்குமார் என்பவர் திருச்சி குமார் அவர்களின் உதவியாளர். நாங்கள் அசோக்குமார் என்பவருக்கு எந்த பண வரவு செலவும் செய்யவில்லை. படம் தயாரிப்பதற்கு சசிகுமார் அவர்கள் தான் எங்களிடம் பணம் பெற்றுள்ளார். எங்களிடம் எந்தவித வியாபார தொடர்பும் இல்லாத அசோக்குமார் எங்களை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

எங்களிடம் பண உதவி பெற்று படம் தயாரிக்கிறார்கள். அதை படம் ரிலீஸ் செய்யும்போது செட்டில் செய்வார்கள். இதுதான் சினிமா நடைமுறை. எந்த முதலீடும் இல்லாமல் சிலர் படம் தயாரிப்பதாக வருகிறார்கள். எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் இவர்களை நம்பி பணம் தருகிறோம். இவர்கள் ஒரு படத்திற்கு பலரிடம் பணம் வாங்குகிறார்கள். ஆனால் இவர்கள் படம் தயாரிக்காமல், வீடு, கார் என்று வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பின்னர் பண உதவி செய்த எங்களையும் சிரமப்படுத்துகிறார்கள். இப்படி சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடி பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அலைவதாக தெரிகிறது. நாங்கள் இருபது ஆண்டுகளாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கும் எங்கள் மேல் எந்த புகாரும் கிடையாது.

மேற்படி அசோக்குமார் என்பவர் எழுதியதாக சொல்லப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை இதன் மூலம்தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More News

கந்துவட்டி தற்கொலை இரண்டு நாள் செய்தி மட்டுமே: டாக்டர் ராம்தாஸ்

கந்துவட்டி கொடுமையால் இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் காரணமாக இன்று ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கந்துவட்டிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.

அன்புச்செழியன் வீட்டுக்கு ரெய்டு போங்க: அரசுக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள்

பைனான்சியர் அன்புச்செழியனின் மிரட்டல் காரணமாக நேற்று இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது அன்புச்செழியனால் திரையுலகில் உள்ள பலர் பாதிக்கப்பட்டுள்ளது

அசோக்குமார் தற்கொலை எதிரொலி: விஷால் எடுத்த அதிரடி முடிவு

பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகை கிட்டத்தட்ட ஆட்டங்காண வைத்துள்ளது. பல தயாரிப்பாளர்கள்

அஜித்தும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர் தான்: சுசீந்திரன்

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் உடலுக்கு திரையுலகமே ஒட்டுமொத்தமாக திரண்டு மலரஞ்சலி செய்து வரும் நிலையில் இயக்குனர் சுசீந்திரன்,

தொடரும் தற்கொலைகள்: என்ன செய்ய வேண்டும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுப்பது என்பது புதிதல்ல. தமிழ் சினிமாவின் முதுகெலும்பே பைனான்சியர்தான் என்று சொல்லலாம். கோடிகள் புரளும் இந்த துறையில் கைக்காசு போட்டு படம் எடுப்பது என்பது