கோபிநாத்துக்கு அவரது மகள் அளித்த பிறந்த நாள் பரிசு!

  • IndiaGlitz, [Sunday,July 05 2020]

விஜய் டிவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ’நீயா நானா’. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நேற்று விஜய் டிவி கோபிநாத் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்களில் சின்னத்திரையில் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மற்றும் பெரிய திரையில் பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்

இந்த நிலையில் கோபிநாத்தின் மகளான வெண்பா, தனது தந்தைக்கு ஒரு இசை விருந்தை பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார். அவருக்கு பிடித்த ’என் இனிய பொன்நிலாவே’ என்ற பாடலை கிடாரில் இசைத்து தனது தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார். இது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த கோபிநாத் ’எனக்கு மிகவும் பிடித்த பாடலை எனக்காக, எனது பிறந்த நாள் பரிசாக பயிற்சி செய்து எனது மகள் வெண்பா வாசித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார் 

சமீபத்தில் கூட தல அஜித்தின் ’விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ பாடலை வென்பா, கிட்டாரில் வாசித்து இருந்தார் என்பதும் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

More News

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து அது புரளி என்றும், மனநிலை சரியில்லாத ஒருவர் செய்த செயல்

சாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில்

2036 வரை ரஷ்யாவுக்கு இவர்தான் அதிபர்!!! அதிரடி அறிவிப்பு!!!

பரபரப்புக்கு பஞ்சமில்லை என்று சொல்லும் அளவிற்கு தற்போது உலக நாடுகளில் அரசியல் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

பிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதையும் ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் பதவியில் இருப்பவர்ளையும், திரையுலகினர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. திரையுலகைச் சேர்ந்த ஒருசிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு

சென்னையில் 2000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு! தமிழகத்தின் பிற பகுதிகளில் அதிகரிப்பால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு 4000ஐ தாண்டிய நிலையில் இன்றும் 3வது நாளாகவும் 4000ஐ தாண்டியுள்ளது என தகவல் வந்துள்ளது.