இவர்தான் 'மெர்சல்' டிசைனுக்கு சொந்தக்காரர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய்யின் 61வது படமான 'மெர்சல்' டைட்டில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை டிசைன் செய்த டிசைனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. போஸ்டரை டிசைன் செய்தவருக்கு விஜய் ரசிகர்கள் நன்றி கூறி வரும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், 'மெர்சல்' போஸ்டரை டிசைன் செய்தவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
'மெர்சல்' அட்டகாசமான போஸ்டரை டிசைன் செய்தவர் கோபி பிரசன்னா என்பவர். கிராபிக் டிசைன் ஆர்ட்டிஸ்ட் ஆன இவர் ஏற்கனவே 'ஆரண்ய காண்டம்', 'பரதேசி', 'ராஜா ராணி', 'வாயை மூடி பேசவும்' 'கத்தி' உள்பட பல படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்துள்ளார்.
இதுவரை ஓரளவு அறிமுகமாகி இருந்த கோபி பிரசன்னா, இன்று ஒரே நாளில் உலக அளவிலான விஜய் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 'மெர்சலான டிசைன் செய்து கொடுத்த கோபிக்கு நமது வாழ்த்துக்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments