இவர்தான் 'மெர்சல்' டிசைனுக்கு சொந்தக்காரர்

  • IndiaGlitz, [Wednesday,June 21 2017]

இளையதளபதி விஜய்யின் 61வது படமான 'மெர்சல்' டைட்டில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை டிசைன் செய்த டிசைனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. போஸ்டரை டிசைன் செய்தவருக்கு விஜய் ரசிகர்கள் நன்றி கூறி வரும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், 'மெர்சல்' போஸ்டரை டிசைன் செய்தவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

'மெர்சல்' அட்டகாசமான போஸ்டரை டிசைன் செய்தவர் கோபி பிரசன்னா என்பவர். கிராபிக் டிசைன் ஆர்ட்டிஸ்ட் ஆன இவர் ஏற்கனவே 'ஆரண்ய காண்டம்', 'பரதேசி', 'ராஜா ராணி', 'வாயை மூடி பேசவும்' 'கத்தி' உள்பட பல படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்துள்ளார்.

இதுவரை ஓரளவு அறிமுகமாகி இருந்த கோபி பிரசன்னா, இன்று ஒரே நாளில் உலக அளவிலான விஜய் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 'மெர்சலான டிசைன் செய்து கொடுத்த கோபிக்கு நமது வாழ்த்துக்கள்

More News

'மெர்சல்' முதல் பார்வையில் இதை யாராவது கவனித்தீர்களா?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டில் 'மெர்சல்' என்பதையும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் சற்று முன் பார்த்தோம்.

இளையதளபதியின் 'தளபதி 61' படத்தின் அட்டகாசமான தலைப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டில் 'மூன்று முகம்' உள்பட பல டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'திருட்டுப்பயலே 2' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால், அப்பாஸ் நடிப்பில் சுசிகணேசன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'திருட்டுப்பயலே' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து 11 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராகி வருகிறது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு?

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள செல்லாத நோட்டுக்களை 2017 மார்ச் 30ஆம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது...

உபேர் கால் டாக்ஸி சி.இ.ஓ திடீர் ராஜினாமா

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் 570 நகரங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனம் உபேர் கால் டாக்ஸி...