close
Choose your channels

தளபதி 63: 5வது முறையாக விஜய் படத்தில் இணையும் பிரபலம்

Tuesday, December 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 63; படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பின் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது 'தளபதி 63' படத்தின் போஸ்டர் டிசைனராக கோபி பிரசன்னா இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த 'கத்தி', 'தெறி', ''மெர்சல்' மற்றும் 'சர்கார்' ஆகிய நான்கு படங்களில் பணிபுரிந்து தற்போது ஐந்தாவது முறையாக தளபதியுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு, உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment