கஜா புயல்: சிறப்பு பக்கம் உருவாக்கி அசத்திய கூகுள்
- IndiaGlitz, [Thursday,November 15 2018]
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் இன்று மாலை கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் கஜா புயல் குறித்த விவரங்களை அவ்வப்போது வானிலை ஆய்வு மையம், அரசு மற்றும் தொலைக்காட்சிகள் அவ்வப்போது பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன.
இந்த நிலையில் கஜா புயலின் முழு விவரங்களை கூகுள் ஒரு சிறப்பு பக்கத்தில் தெளிவாக பதிவு செய்துள்ளது. கூகுளில் சென்று 'Gaja Storm' என்று டைப் செய்து தேடினால் வரும் முதல் பக்கத்தில் கஜா புயல் குறித்த முழுவிபரங்கள் உள்ளது.
இந்த புயல் எப்போது கரையை கடக்கும், தற்போது எங்கு உள்ளது, எத்தனை மைல் வேகத்தில் உள்ளது, இந்த புயலால் பாதிக்கப்படும் இடங்கள் எவைஎவை? ஆகிய விவரங்கள் இந்த பக்கத்தில் உள்ளன. அதுமட்டுமின்றி இந்த பக்கத்தில் உள்ள மேப்பை கிளிக் செய்தால் புயல் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு அந்த பகுதி மக்களை அலர்ட் செய்துள்ளது. மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் இந்த விவரங்கள் இருப்பது கூடுதல் சிறப்பு