SIRI, ALEXA-க்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பேசும் கிளி.. புது Chatbot MEENA..!

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

உலகளவில் பொருளாதார நிலை மேலும், கீழும் இறங்கி வருவது போல, தொழில்நுட்பங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சாஃப்ட்வேர் அப்டேட்டுகளும் அதன் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மக்களிடம் வரவேற்பை பெற்று வரும். அதுபோலவே சாட்பாட்களும் (Chatbot).

ஏற்கெனவே ஆப்பிளின் 'சிரி', அமேசானின் 'அலெக்ஸா', கூகுள் அசிஸ்டென்ட் என செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட சாட்பாட்கள் இருந்தாலும் அவை எதுவும் எல்லா சமயங்களிலும் உதவிபுரியும் வகையில் அமைந்திருக்காது. இதனால் பயனாளர்களை சற்று அலுப்படைய வைக்கக்கூடும். ஆகையால் இதுபோன்ற அதிருப்திகளை சரிசெய்வதற்காக கூகுள் நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவுகொண்ட ஒரு பேசும் கிளியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது கூகுள் மீனா.

இந்த கூகுள் மீனா, அலெக்ஸா, சிரி போன்று கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் தராமல் பயனாளருடன் உரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 40 பில்லியன் வார்த்தைகள் கொண்ட தரவுகளை கூகுள் உள்ளீடு செய்துள்ளதாம். மேலும், பயனாளரின் தகவலை கூகுள் மீனா புரிந்துகொள்வதற்காக Encoder Block மற்றும் Decoder Blockக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

பேசும் கிளி எப்படி மனிதர்களுடன் உரையாடுமோ அதுபோலவே இந்த கூகுள் மீனாவும் உரையாடும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, Customer support, Data gathering, Healthcare, Personalised coach, Sales, Personalised news, Banking போன்றவற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

இயக்குனர் சுசிந்திரனின் அடுத்த படத்தி ஹீரோ குறித்த தகவல்!

இயக்குனர் சுசீந்திரனின் 'வெண்ணிலா கபடி குழு 2', 'கென்னடி கிளப்', மற்றும் 'சாம்பியன் ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில்

'ஜானு'வுடன் திரை உலக வாழ்வை முடித்துக் கொள்ள சமந்தா முடிவு? அதிர்ச்சியில் ரசிகர்கள் 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமான 'ஜானு' என்ற திரைப்படம் நேற்று வெளியானது. த்ரிஷா வேடத்தில் சமந்தா நடித்திருந்த இந்தப் படத்திற்கு

அஜித் படத்தை மிஸ் செய்த நடிகருக்கு கிடைத்த தனுஷ் பட வாய்ப்பு

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னா பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது

குழந்தைகளுக்கு கேன்சர்.. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ.5,365 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு..!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.5,365 கோடி இழப்பீடு அளிக்கவேண்டும் என்று அமெரிக்காவின் நியூ ஜொ்ஸி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூரரை போற்று இசை வெளியீட்டு விழா: தமிழ் திரையுலகில் இதுதான் முதல்முறை

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகிய 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது