SIRI, ALEXA-க்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பேசும் கிளி.. புது Chatbot MEENA..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகளவில் பொருளாதார நிலை மேலும், கீழும் இறங்கி வருவது போல, தொழில்நுட்பங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சாஃப்ட்வேர் அப்டேட்டுகளும் அதன் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மக்களிடம் வரவேற்பை பெற்று வரும். அதுபோலவே சாட்பாட்களும் (Chatbot).
ஏற்கெனவே ஆப்பிளின் 'சிரி', அமேசானின் 'அலெக்ஸா', கூகுள் அசிஸ்டென்ட் என செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட சாட்பாட்கள் இருந்தாலும் அவை எதுவும் எல்லா சமயங்களிலும் உதவிபுரியும் வகையில் அமைந்திருக்காது. இதனால் பயனாளர்களை சற்று அலுப்படைய வைக்கக்கூடும். ஆகையால் இதுபோன்ற அதிருப்திகளை சரிசெய்வதற்காக கூகுள் நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவுகொண்ட ஒரு பேசும் கிளியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது கூகுள் மீனா.
இந்த கூகுள் மீனா, அலெக்ஸா, சிரி போன்று கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் தராமல் பயனாளருடன் உரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 40 பில்லியன் வார்த்தைகள் கொண்ட தரவுகளை கூகுள் உள்ளீடு செய்துள்ளதாம். மேலும், பயனாளரின் தகவலை கூகுள் மீனா புரிந்துகொள்வதற்காக Encoder Block மற்றும் Decoder Blockக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.
பேசும் கிளி எப்படி மனிதர்களுடன் உரையாடுமோ அதுபோலவே இந்த கூகுள் மீனாவும் உரையாடும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, Customer support, Data gathering, Healthcare, Personalised coach, Sales, Personalised news, Banking போன்றவற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments