2019ல் ஒரு லட்சம் கோடி வருமானம் பெற்ற நிறுவனம் எது தெரியுமா?
- IndiaGlitz, [Tuesday,February 04 2020]
உலகின் முன்னணி வீடியோ இணையதளங்களில் ஒன்று யூடியூப் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இணையதளத்தில் இல்லாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். சிறு குழந்தைகளுக்கு தேவையான வீடியோக்கள் முதல் இளைஞர்கள், பெண்கள், முதியோர்களுக்கான வீடியோக்கள் வரை அனைத்து அம்சங்களுடன் கூடிய வீடியோக்கள் இந்த இணையதளத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு தேவையான புரோஜக்ட் வீடியோக்கள், கல்வி சம்பந்தப்பட்ட வீடியோக்கள், பொழுதுபோக்கு வீடியோக்கள், உலக செய்திகளுக்கான வீடியோக்கள் என இந்த இணையதளத்தில் இல்லாத வீடியோ வகைகளே இல்லை என்று கூறலாம். மேலும் யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதன் மூலம் பலர் நல்ல வருவாயை பெற்று வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் இதையே முழுநேர தொழிலாக கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுவரை யூடியூப் நிறுவனத்திற்கு எவ்வளவு வருமானம் கிடைத்து வருகிறது என்பது குறித்த தகவல் வரவில்லை. ஆனால் முதல் முதலாக 2019ஆண்டில் விளம்பரம் மூலம் மட்டும் 15.1 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருமானம் கடந்த ஆண்டு அதாவது 2018ல் கிடைத்த வருமானத்தை விட 35.8% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.