பெங்களூருவில் GOOGLE ஊழியருக்கு கொரோனா தொற்று..?! பரவாமல் தடுக்குமா அரசு..?!
- IndiaGlitz, [Friday,March 13 2020]
பெங்களூரில் செயல்பட்டு வந்த கூகுளின் கிளை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
எந்த ஒரு அறிகுறியும் தெரிவதற்கு முன்னர் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் நோய் தொற்று அறிகுறிகள் தெரிந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார் எனவும், கொரோனா உறுதிசெய்யப்பட்டவுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அலுவலகத்தை கூகுள் மூடியுள்ளது. ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருமாறு கூறியுள்ளது. அந்த ஊழியர் வெளிநாடு சென்று வந்தாரா..?! அறிகுறிகள் பற்றி தெரியாமல் மற்ற யாருடனாவது நேரடி தொடர்பு கொண்டாரா..?! அவரது குடும்ப உறுப்பினர்கள் என எல்லோரையும் தனிமைப்படுத்தி சோதனைக்கு உள்ளாக்க போவதாக கர்நாடகா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.