'குட் நைட்' தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. கிளாப் அடித்து தொடங்கி வைத்த விஜய்சேதுபதி..!

  • IndiaGlitz, [Friday,August 04 2023]

நடிகர் மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய லாபத்தை பெற்றதாகவும் கூறப்பட்டது. திரையரங்கை அடுத்து ஓடிடியில் வெளியாகி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் கிட்டத்தட்ட ’குட் நைட்’ குழுவினர் மீண்டும் இணைந்துள்ளனர். ’குட் நைட்’ திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது

இந்த படத்திலும் மணிகண்டன் தான் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. கௌரி பிரியா ரெட்டி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை வியாஸ் இயக்க உள்ளார். ’குட் நைட்’ திரைப்படத்தில் இசையமைத்த சீன் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கிளாப் அடித்து படத்தை தொடங்கி வைத்தார்.

’குட் நைட்’ குழுவினர் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படமும் வெற்றி படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

இயற்கை மீது இவ்வளவு அக்கறையா? பிகினி உடையில் பிரச்சாரம் செய்த நடிகை எமி ஜாக்சன்

தமிழ் சினமா ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற நடிகையான எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் உணவு மற்றும் இயற்கை குறித்த முக்கியமான கருத்து

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அசோக் சக்ரா விருது பெற்ற பிரபலத்தின் வாழ்க்கை வரலாறா?

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர்  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

கமல் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அதிதிராவ் ஹைத்ரி..ஹீரோ யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' என்ற படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகை அதிதிராவ் ஹைத்ரி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

பிரமாண்டமான பைக்கர் சிலை முன் அஜித்.. ஷாலினி வெளியிட்ட மாஸ் புகைப்படம்..!

 நடிகர் அஜித் சமீபத்தில் டென்மார்க், நார்வே உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் பைக்கில் பயணம் செய்தார் என்பதும், அதன் பின் சமீபத்தில் அவர் சென்னை திரும்பினார் என்பதையும் பார்த்தோம்.

500 தியேட்டரில் இன்று ரிலீஸாகும் சூர்யா படம்.. ஹவுஸ்புல் புக்கிங்,..!

சூர்யா நடித்த திரைப்படம் இன்று 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர்.