'குட் நைட்' மணிகண்டன் அடுத்த படத்தை இயக்கிய யூடியூப் பிரபலம்.. ஹீரோயின் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் பிரபலமாகி, அதன் பிறகு சூப்பர் ஹிட் படமான ’குட் நைட்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்த மணிகண்டன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை யூடியூப் பிரபலம் ஒருவர் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தை யூடியூப் பிரபலம் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே யூடியூபில் ‘லிவ்-இன்’ என்ற தொடரை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், கர்நாடக மாநிலத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் கோகர்னா என்ற பகுதியில் சமீபத்தில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படத்தில் மணிகண்டன் ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா என்பவர் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கண்ணா ரவி உட்பட ஒரு சிலர் நடிக்கின்றனர். சீன் ரோல்டன் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும் பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர்.
இந்த படத்தை ’குட் நைட்’ படத்தை தயாரித்த யுவராஜ் கணேசன் என்பவர் தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இவ்வருட இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next step with the new beginnings !!@gouripriyareddy @iamkannaravi @Vyaaaas @RSeanRoldan @kshreyaas @barathvikraman @Yuvrajganesan @mageshraj@MillionOffl @proyuvraaj pic.twitter.com/jrEUXRKgbR
— Manikandan Kabali (@Manikabali87) August 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments