'குட்நைட்' மணிகண்டனின் 'லவ்வர்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிகண்டன் நடித்த ’குட்நைட்’ என்ற சின்ன பட்ஜெட் படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ’குட்நைட்’ வெற்றி படத்தை அடுத்து மணிகண்டன் ’லவ்வர்’ என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பிப்ரவரி 9ஆம் தேதி காதலர் தின விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
’குட்நைட்’ இயக்குனர் பிரபு வியாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரிப்ரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,
கல்லூரியில் படிக்கும் காதலர்கள் படிப்பு முடிந்ததும் காதலில் ஏற்படும் பிரச்சனையால் பிரிய நேரிடுகிறது. அதன் பின் கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் இணைந்தார்களா என்பது தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது.
சீன் ரோல்டான் இசையில், ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில், பரத் விக்ரமன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ’குட்நைட்’ போலவே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Save the date! 🗓️♥️#Lover is all set for a grand release in Theatres on FEBRUARY 9th 🥁🥁
— Think Music (@thinkmusicindia) January 13, 2024
We’re sure you are to going love it 🥰 ❤️
Written & directed by @Vyaaaas
A @RSeanRoldan musical !! @Manikabali87 @srigouripriya @iamkannaravi @kshreyaas @barathvikraman @Lyricist_Mohan… pic.twitter.com/GhgDizV3AE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com