சென்னை மழை நிலவரம்: தமிழ்நாடு வெதர்மேன் கூறும் தகவல்
- IndiaGlitz, [Friday,October 05 2018]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து ஆரம்பத்திலேயே அதிக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வரும் 7ஆம் தேதி ஒரே நாளில் 25செமீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தை பொறுத்தவரை எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை என்பதை பார்ப்போம்
எண்ணூர்: 116 mm
மாதவரம்: 57 mm
திருப்போரூர்: 51 mm
சென்னை விமான நிலையம்: 50 mm
பூந்தமல்லி: 49 mm
நுங்கம்பாக்கம்: 48 mm
புழல்: 45 mm
தரமணி: 38mm
கொளப்பாக்கம்: 27 mm
தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் இருந்து டெல்டா பகுதி வரை இன்று முழுவதும் நல்ல மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.