நீண்ட இடைவெளிக்கு பின் ஆர்யாவுக்கு கிடைத்த நல்ல ஓப்பனிங் வசூல்

  • IndiaGlitz, [Monday,August 06 2018]

கடந்த சில ஆண்டுகளாக ஆர்யா நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவர் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிக்க ஒரே ஒரு வெற்றி படத்திற்காக காத்திருந்தார். அந்த காத்திருப்பு தற்போது 'கஜினிகாந்த்' மூலம் நிறைவேறியுள்ளது.

கடந்த வாரம் வெளியான ஆர்யா, சாயிஷா நடித்த 'கஜினிகாந்த்' சென்னையில் 18 திரையரங்க வளாகங்களில் 204 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,14,84,568 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்ததே இதுவொரு வெற்றிப்படம் என்பதற்கான அறிகுறியாக உள்ளது.

ஏற்கனவே 'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமாருக்கு இந்த படத்தின் வெற்றியால் ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.