close
Choose your channels

'குட்நைட்' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த மாஸ் ஹீரோவா? விரைவில் அறிவிப்பு..!

Sunday, November 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ’குட்நைட்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.

மணிகண்டன் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’குட்நைட்’. இந்த படம் கடந்த மே மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் திரையரங்குகளில் சூப்பர் ஹிட் ஆன இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’குட்நைட்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்த விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படங்களை முடித்துவிட்டு விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment