'குட்நைட்' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த மாஸ் ஹீரோவா? விரைவில் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,November 19 2023]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ’குட்நைட்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.

மணிகண்டன் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’குட்நைட்’. இந்த படம் கடந்த மே மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் திரையரங்குகளில் சூப்பர் ஹிட் ஆன இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’குட்நைட்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்த விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படங்களை முடித்துவிட்டு விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

நீங்களாச்சு, பிக்பாஸ் ஆச்சு.. பிக்பாஸ் பிரதீப்பின் நக்கல் பதிவு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பிரதீப் தனது சமூக வலைத்தளத்தில் நீங்களாச்சு, பிக்பாஸ் ஆச்சு, என்னை ஆளை விடுங்கள் என்று நக்கலுடன் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி

ஸ்கூல் தான் வாழ்க்கையில் ஒரு கோல்டன் பீரியட்.. விஜய் டிவி ரக்சனின் 'மறக்குமா நெஞ்சம்' டிரைலர்..!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ரக்சன் ஹீரோவாக நடித்த 'மறக்குமா நெஞ்சம்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று

மன்சூர் அலிகான் பெண்களை இப்படி பார்ப்பது வெட்கக்கேடானது: 'தங்கலான்' நடிகை ஆவேசம்..!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில்  மன்சூர் அலிகான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சறவனா? த்ரிஷா விவகாரம் குறித்து மன்சூர் அலிகான்..!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அவரது பேச்சுக்கு த்ரிஷா, லோகேஷ் கனகராஜ்  உள்ளிட்ட பலர்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்கள்.. அட்லியின் மெகா திட்டம்..!

இயக்குனர் அட்லி ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.