'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு.. 'விடாமுயற்சி' அறிவிப்பு எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 'விடாமுயற்சி’ திரைப்படம் தீபாவளி அன்றும் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கல் தினத்திலும் வெளியாகும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் பணிகள் இன்னும் தாமதமாவதால், இந்த படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றும், அனேகமாக கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனால், ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போகலாம் என்றும், அனேகமாக அஜித் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால், இன்று ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வாழ்த்து போஸ்டரில் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என மீண்டும் உறுதி செய்துள்ளது. எனவே, ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது உறுதியாகிய நிலையில், ’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி குறித்து லைகா நிறுவனம் விரைவில் அறிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Team #GoodBadUgly wishes the young and exciting director @Adhikravi a very Happy Birthday ❤🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) September 17, 2024
He will serve VERA LEVEL entertainment on big screens in Pongal 2025 🔥
#AjithKumar @MythriOfficial @suneeltollywood @AbinandhanR @ThisIsDSP @editorvijay… pic.twitter.com/Sjcb4EssCW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments