close
Choose your channels

'குட் பேட் அக்லி' படத்தின் வில்லன் இவரா? 'வேதாளம்' படத்தில் மிரட்டினாரே..!

Sunday, September 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது, அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கிடையில், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் குறித்த தகவல் சற்றுமுன் கசிந்துள்ளது.

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படம் "குட் பேட் அக்லி". இப்படம் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஜித் தவிர நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தற்போதைய தகவல்படி, ராகுல் தேவ் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.. இவர் ஏற்கனவே "வேதாளம்" திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து வில்லனாக நடித்தவர், இப்போது மீண்டும் இணைகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது, இதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment