'குட் பேட் அக்லி' படத்தின் வியாபாரம்.. சுரேஷ் சந்திரா அறிவித்த புதிய தகவல்..!

  • IndiaGlitz, [Friday,October 25 2024]

அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முக்கிய வியாபார தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது; தற்பொழுது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா ஜோடியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

’குட் பேட் அக்லி’ படத்தின் முதல் அறிவிப்பு வெளியான போதே, இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ’குட் பேட் அக்லி’படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் திரையரங்கு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

More News

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு : ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில், ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அம்மனின் அற்புத சக்திகள் பற்றி ஆழமாகப் பேசியுள்ளார்.

வாமனன் சேஷாத்ரி சொல்லும் பூட்டு பரிகாரம்: எதிரிகள், வழக்குகள் நீங்கும் ரகசியம்!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் ஜோதிடர் வாமனன் சேஷாத்ரி அவர்கள் அளித்த பேட்டியில், தாந்திரீகம், மந்திரம் மற்றும் பூட்டு பரிகாரம் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

ஆரம்பமே அட்டகாசம்..! தவெக மாநாட்டில் 2 பெண் தலைவர்களின் கட்-அவுட்டுகள்..

தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில்,

தீபாவளி விருந்தாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 'லப்பர் பந்து'.. வீட்டுக்கே வரும் கெத்து-அன்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது  சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான

கவினின் 'பிளடி பெக்கர்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சான்றிதழ் தகவல்..!

கடந்த சில மாதங்களாக வெளியாகி கொண்டிருக்கும் திரைப்படங்கள் இரண்டரை மணி நேரத்திற்கு அதிகமாக, சில படங்கள் 3:00 மணி நேரத்திற்கு அதிகமாக ரன்னிங் டைம் கொண்டதாக இருக்கும்