'குட் பேட் அக்லி' படத்தின் வியாபாரம்.. சுரேஷ் சந்திரா அறிவித்த புதிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முக்கிய வியாபார தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது; தற்பொழுது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா ஜோடியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
’குட் பேட் அக்லி’ படத்தின் முதல் அறிவிப்பு வெளியான போதே, இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ’குட் பேட் அக்லி’படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் திரையரங்கு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.
Exciting news! #RomeoPictures proudly acquires the Tamil Nadu, Kerala, and Karnataka theatrical rights of #GoodBadUgly
— Suresh Chandra (@SureshChandraa) October 25, 2024
#AjithKumar @MythriOfficial @Adhikravi @trishtrashers @Prasanna_actor @iam_arjundas @mynameisraahul @ThisIsDSP @suneeltollywood… pic.twitter.com/1uvyD9Rhts
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com