'புலி' படத்திற்கு தடை கேட்ட வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,September 29 2015]

தஞ்சையை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் தான் இயக்கிய 'தாகபூமி' என்ற குறும்படத்தின் கதையை தழுவி 'கத்தி' படம் உருவாக்கப்பட்டதாகவும், இதற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் தனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் விஜய் நடித்த 'புலி' படத்தையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'அகிரா' படத்தையும் தடை செய்ய வேண்டும் என புதிய மனு ஒன்றையும் கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று தஞ்சை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும் 'புலி' படத்தை அக்டோபர் 1ஆம் தேதி தடை செய்வது குறித்து அவர் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே 'புலி' படத்தின் ரிலீஸுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளார்.

More News

தூங்காவனம்: கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் கேரக்டர்கள் குறித்த தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது...

'வேதாளம்' டைட்டில் குறித்த சுவாரஸ்யமான தகவல்

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் டைட்டில் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது...

3D-யில் ரஜினி-ஷங்கரின் 'எந்திரன் 2'?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், 'ஐ' படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'எந்திரன் 2' படத்திற்கான ஆரம்பகட்ட...

உதயநிதியின் 'கெத்து' ரிலீஸ் தேதி?

'ஒருகல் ஒரு கண்ணாடி, 'நண்பேண்டா', இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களில் நடித்து வந்த இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின்...

அஜீத்தின் 'வேதாளம்' படத்துடன் மோதுகிறதா 'விஜய் 59

சமீபத்தில் விஜய் நடித்த 'புலி' படத்தின் இரண்டாவது டிரைலரும், அஜீத் நடித்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கும்...