தங்க மகள் கோமதி மாரிமுத்துவிற்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருச்சி மாவட்டம் முடி கண்டம் என்கிற அடிப்படை வசதிகள் இல்லாதா சாதாரண கிராமதில் பிறந்து, வறுமையை தோக்கடித்து, நம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் இன்று இந்தியாவையே தன்னுடைய திறமையால் திரும்பி பார்க்க வைத்துள்ளார், தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து.
சமீபத்தில், தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடி தந்த கோமதி மாரிமுத்துவை பாராட்டி, பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பரிசு தொகை அறிவித்து அவரை ஊக்குவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் அஞ்சல்தலை சேகரிப்பாளர் விஜயகுமார் ,ரகுபதி, லால்குடி விஜயகுமார், ஆகியோர் இந்திய அஞ்சல் துறை மை ஸ்டாம்ப் திட்டத்தில் புதிய அஞ்சல்தலை ஒன்றை அச்சிட்டு வழங்கியுள்ளனர்.
அஞ்சல் தலையில் தங்க மங்கை கோமதி தங்கப்பதக்கத்துடனும் செங்கோட்டை புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இவர்களின் இந்த செயலுக்கு பலரது மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com