கிரவுண்டுக்குள்ள இறங்கிட்டா எல்லாத்தையும் மறந்துடுவாங்க: மனம் திறக்கும் கோமதியின் தோழி
Send us your feedback to audioarticles@vaarta.com
தங்கமங்கை கோமதி இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்து நாட்டிற்கே பெருமை சேர்த்த நிலையில் கோமதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் கோமதியின் தோழி லோகநாயகி கோமதி குறித்து கூறியதாவது:
* எனக்கும் கோமதிக்கும் எட்டு வயது வித்தியாசம். அவங்க என்னை தோழியா ஏத்துக்கிட்டாலும் நான் அவங்களை அக்கான்னுதான் கூப்பிடுவேன்.
* பெங்களூரில நாங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தான் தங்கியிருந்தோம்., பெரும்பாலும் அவங்கதான் சமைப்பாங்க.
* கோமதி செம ஹார்ட் வொர்க்கர். எப்போதும் ஸ்போர்ட்ஸ் பத்தியே பேசிகிட்டு இருப்பாங்க. அப்பா இல்லாத குடும்பத்திற்கு நான் தான் தூணா இருக்கணும்ன்னு அடிக்கடி சொல்லுவாங்க.
* கோமதிக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்கும். அவங்களுக்காகத்தான் ஸ்போர்ட்ஸ்ல இருக்கேன். அவங்களுக்காக நான் ஏதாவது செய்யனுன்னு சொல்லுவாங்க.
* ரூம்ல இருக்கும்போது திடீர் திடீர்னு அழுவாங்க. ஆனால் கிரவுண்டுக்குள்ள இறங்கிட்டா எல்லாத்தையும் மறந்துடுவாங்க.
* கோமதிகிட்ட இப்ப வரைக்கும் ஆண்ட்ராய்டு போன் கிடையாது. அதேபோல் கோமதி அக்கா ஒரு ஆஞ்சநேயர் பக்தை. சனிக்கிழமை தவறாம கோவிலுக்கு போயிடுவாங்க.
* அவங்க அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவங்களால பார்க்க போக முடியலை. அப்பா இறந்தபின்னர் தான் போனாங்க. இப்போ வரைக்கும் அதை சொல்லி வருத்தப்படுவாங்க.
* கோமதி அக்கா இலக்கை நோக்கி வேகமாக ஓடி வர்றதை பார்த்து நான் கண்ணீர் விட்டு அழுதுட்டேன். இந்த வெற்றி சாதிக்க நினைக்கின்ற பெண்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுத்துருக்கு.
இவ்வாறு கோமதியின் தோழி லோகநாயகி தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout