கோலி சோடா 2 ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Thursday,May 10 2018]

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இயக்கிய 'கோலி சோடா 2' திரைப்படம் மே மாதம் 18ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழுவின் அறிவுரையின்படி இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக இயக்குனர் விஜய் மில்டன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதன்படி இந்த படம் வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியில் கோலிசோடா 2 வெளியாவதற்கு திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அனுமதி அளித்து கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி, செம்பன் வினோத் ஜோஸ், ரோஹினி, சுபிக்சா, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார். 
 

More News

மலேசியா தேர்தல்: 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்தது எதிர்க்கட்சி

நேற்று மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்துள்ளது மகதீர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி

விஷாலின் 'இரும்புத்திரை': முதல் பாதியின் விமர்சனம்

மோசடியாக பணம் சம்பாதிப்பவர்கள், வங்கியை ஏமாற்றி லோன் வாங்குபவர்களிடம் இருந்து பணத்தை இண்டர்நெட் மூலம் கொள்ளையடிக்கின்றது ஒரு கும்பல்.

நெடுவாசல் திட்டம் ரத்து: போராட்டக்காரர்களுக்கு விஷால் வாழ்த்து

விவசாய நிலங்கள் அடங்கிய நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு ஆரம்பிக்கும் முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புக்குரல் வெளிப்பட்டது.

தோல்வி அடைந்தாலும் அரசியலில் தொடர்வேன்: கமல்ஹாசன்

அரசியலில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து நீடிப்பேன் என்று நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.

வாழ்க்கையில் பிரபலமாக 2 வழிகள் இருக்கு: காலா ஆடியோ விழாவில் தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர்