கார்த்திக்கு ஒரு ஸ்டார் பட்டம்.. 'ஜப்பான்' படத்தின் 'டச்சிங் டச்சிங்' பாடல் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,November 08 2023]

கார்த்தி நடித்த ‘ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ’டச்சிங் டச்சிங்’ என்ற பாடலின் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கார்த்தி மற்றும் இந்திராவதி சௌகான் ஆகிய இருவரும் இந்த பாடலை பாடியுள்ளனர்

இந்த நிலையில் இந்த பாடலை கார்த்தி பாடியதை அடுத்து ’இந்த பாடலை பாடியவர் உங்கள் கோல்டன் ஸ்டார் ஜப்பான்’ என்று சப்டைட்டில் வருவதை அடுத்து கார்த்திக்கு ’கோல்டன் ஸ்டார் என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பட்டத்தை அவர் தொடர்ந்து பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் உள்பட பல ஸ்டார் பட்டங்கள் நடிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திக்கு கோல்டன் ஸ்டார் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தியின் 25வது படமான இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தில் கார்த்தி, அனு இமானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், அன்பறிவு ஸ்டாண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

அவரு ஆம்பள இல்லைன்னு ஃபீல் பண்றாரா? ஜோவிகா கேட்ட கேள்வி யாரை?

 அவர் ஆம்பளையா இல்லையான்னு  ஃபீல் பண்றாரா என்ன  ஜோவிகா கேட்ட நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நிக்சனுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்.. மாயா கேங் அதிர்ச்சி.. ஃபுல் ஃபார்மில் விசித்ரா..!

பிக் பாஸ் இன்று வைத்த ஒரு டாஸ்க் நிக்சனுக்கு ஆப்பு வைத்தது போல் இருந்தது மட்டுமின்றி மாயா குரூப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

ஜோவிகாவோட மைனஸ் எல்லாம் வெளியே வருகிறது: சரியாக கணித்த போட்டியாளர்..!

ஜோவிகாவின் பிளஸ்கள் எந்த அளவுக்கு வெளியே வந்ததோ, அதே அளவுக்கு தற்போது அவரது மைனஸ் வெளியே வருகிறது என பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான  விசித்ரா கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆரம்பித்தது 'இந்தியன் 3' படப்பிடிப்பு? கமல் எத்தனை நாள் கால்ஷீட் கொடுத்தார்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் உள்பட தொழில்நுட்ப

'ஜிகர்தண்டா 2' கதைக்களம் 1975 என தேர்வு செய்ததற்கு ரஜினி தான் காரணம்: கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது