2022 கோல்டன் குளோப்ஸ் விருது பெற்ற பிரபலங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக உலக அளவில் மதிக்கப்படும் விருதுகளுள் ஒன்று கோல்டன் குளோப்ஸ். கொரோனா பாதிப்புகளுக்கு இடையே இந்த ஆண்டிற்கான (79 ஆவது) கோல்டன் குளோப் விருது வழங்கும்விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டிவெர்லி ஹில்டன் ஹோட்டலில் கடந்த 9 ஆம் தேதி இரவு நடைபெற்றது.
முன்னதாக கோல்டன் குளோப்ஸ் விருதுகளை வழங்கும் குழுவில் 87 வெள்ளையர்கள் இடம்பெற்று உள்ளனர். இதில் ஒரு கறுப்பினத்தவர் கூட இடம்பெறவில்லை. இந்த விழா நடைமுறையில் இனப்பாகுபாட்டைக் கொண்டிருக்கிறது என்று கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டுகளில் கோல்டன் குளோப்ஸ் விருதுகளைப் பெற்ற பிரபலங்கள் பலரும் தங்களது விருதுகளை திருப்பிக்கொடுக்கப் போவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது.
இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் விழா நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை Will Simith வென்றுள்ளார். அதேபோல சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற ஸ்குவிட் கேம் தொடரில் நடித்திருந்த ஓசங் சோ தொலைக்காட்சித் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான விருதைத் தட்டிச்சென்றுள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறந்த படம்- தி பவர் ஆஃப் டாக் (இயக்கம் – ஜேன் கேம்பியன்)
சிறந்த திரைக்கதை – பெல்ஃபாஸ்ட் (இயக்குநர் கென்னத் ப்ரனா)
சிறந்த இயக்குநர் – ஜேன் கேம்ஃபைன், தி பவர் ஆஃப் டாக்
சிறந்த நடிகை – நிக்கோல் கிட்மேன்( திரைப்படம் – பீயிங் தி ரிக்கார்டோஸ்)
சிறந்த நடிகர் – வில் ஸ்மித் (திரைப்படம் . கிங் ரிச்சர்ட்)
சிறந்த திரைப்படம் (மியூசிக்கல் அல்லது காமெடி) – வெஸ்ட் சைட் ஸ்டோரி (இயக்குநர்- ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்)
சிறந்த நடிகை (மியூசிக்கல் அல்லது காமெடி) – ரேச்சல் ஸெக்லர் (திரைப்படம்- வெஸ்ட் சைட் ஸ்டோரி)
சிறந்த நடிகர் (மியூசிக்கல் அல்லது காமெடி) ஃ- ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ( திரைப்படம்- டிக் டிக்… பூம்)
சிறந்த துணை நடிகை – அரியானா டி போஸ் (திரைப்படம்- வெஸ்ட் சைட் ஸ்டோரி West side story)
சிறந்த துணை நடிகர்- கோடி ஸ்மிட் – மெக்ஃபீ (திரைப்படம்-தி பவர் ஆஃப் தி டாக்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – என்கேன்டோ (இயக்கம் – பைரான் ஹாவர்ட் ஜேரட் புஷ்)
சிறந்த பின்னணி இசை –ட்யூன் (இசை – ஹான்ஸ் ஜிம்மர்)
சிறந்த பாடல் – நோ டைம் டு டை (படம்- நோ டைம் டு டை)
சிறந்த அயல்மொழி திரைப்படம் – ட்ரைவ் மை கார் (ஜப்பான்)
தொலைக்காட்சி இசை அல்லது காமெடிக்கான சிறந்த நடிகர் _ Jason sudeikis (Ted Lasso)
TV series or Movie சிறந்த நடிகை Sarah snook (Succession)
Limited Series or Televison Movie சிறந்த நடிகர் –Micael Keation (Dopesick)
Limited series or television சிறந்த நடிகை Kate Winslet (mare of Easttown)
Televison Series Musical or Comedy சிறந்த நடிகை – Jean Smart (Hacks)
சிறந்த டிவி சீரிஸ் மியூசிக்கல் அல்லது காமெடி –Hacks
சிறந்த Limited Series or Movie made for television – The underground Railroad
தொலைக்காட்சி தொடரின் சிறந்த துணை நடிகருக்கான விருது ஸ்குவிட் கேமில் நடித்த ஓசங் சோவிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது அவர் நடித்த “பிளேயர் 001“ என்கிற கேரக்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல 2022 கோல்டன் குளோப்ஸ் விருதில் West side story திரைப்படம் 3 விருதுகளை அள்ளிச் சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com