தென்னிந்திய திரைப்படத்திற்கு கோல்டன் குளோப் விருது: பிரதமர் மோடி வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபகாலமாக பாலிவுட் திரைப்படங்களை விட தென்னிந்திய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன என்பதும் குறிப்பாக எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’, யாஷ் நடித்த ’கேஜிஎஃப் 2’ கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ மற்றும் ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா ஆகிய திரைப்படங்கள் பாலிவுட் திரையுலகினரை திரும்பி பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்காக 6 பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் ’நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு விருது கிடைத்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் எஸ்எஸ் ராஜமாவுலி இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி மற்றும் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஆர்.ஆர்.ஆர்’, பட குழுவினர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதேபோல் உலகநாயகன் கமலஹாசன், இசை புயல் ஏஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா ஆகியோர்களும் ’ஆர்.ஆர்.ஆர்’ பட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய திரைப்படத்திற்கு உலக அளவில் கௌரவம் தரும் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்பட்டு வருகிறது.
A very special accomplishment! Compliments to @mmkeeravaani, Prem Rakshith, Kaala Bhairava, Chandrabose, @Rahulsipligunj. I also congratulate @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan and the entire team of @RRRMovie. This prestigious honour has made every Indian very proud. https://t.co/zYRLCCeGdE
— Narendra Modi (@narendramodi) January 11, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments