close
Choose your channels

ராம்சரண் மகளுக்கு தங்கத்தொட்டில் பரிசளித்த பிரபல தொழிலதிபர்.. விலை என்ன தெரியுமா?

Friday, June 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு ’க்ளின் காரா கோனிடெலா’ என்ற பெயர் வைத்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த குழந்தைக்கு பிரபல தொழிலதிபர் தங்கத்திலான தொட்டில் பரிசளித்ததாக கூறப்படும் நிலையில் அதன் விலை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராம்சரண் தேஜா - உபாசனா தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிய நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் ராம்சரண் தேஜா - உபாசனா குழந்தையை பார்க்க அவரது குடும்பத்தினர் தொடர்ச்சியாக வந்திருந்தனர் என்பதும் சமீபத்தில் பெயர் சூட்டு விழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தம்பதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்றும் ராம்சரண் மகளுக்கு விலை உயர்ந்த தங்கத்தினால் செய்யப்பட்ட தொட்டிலை பரிசாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தங்கத் தொட்டில் விலை ரூ.20 லட்சம் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment