சென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!!!
- IndiaGlitz, [Tuesday,October 20 2020]
சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விதிமுறைகளை மீறி தங்கம் கடுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் கேரளா மற்றும் தமிழகத்தில் அடிக்கடி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சென்னை பன்னாட்டு விமான நிலையில் சோதனையில் ஈடுபட்டு இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் 44.4 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்து உள்ளனர். துபாயில் இருந்து தமிழகத்திற்கு திரும்பி வந்த சிவகங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து இந்தத் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி விதிப்புகள் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் தற்போது தங்கத்தின் விலையிலும் பல மடங்கு விலை ஏற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வரி விதிப்பு முறைகளில் மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருமா என்பது போன்ற எதிர்ப்பார்ப்புகளையும் பொருளாதார வல்லுநர்கள் எழுப்பி உள்ளனர்.