தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா.....!சொகுசு கார் முதல் கோடிகளில் குவியும் ரொக்கம் வரை ...!

23 வயது நிரம்பிய நீரஜ்  சோப்ரா பங்குபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி இதுதான். டோக்கியோ-வில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இறுதி நாளில், ஆடவர் ஈட்டி எரிதல் போட்டியில் தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார் நீரஜ். முதல் முயற்சியில் ஈட்டியை 87 மீட்டர் தூரத்திற்கு செலுத்தினர். இறுதிப்போட்டியின் முதல் சுற்றில், சுமார் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசியுள்ளார். இவரின் தொலைவை பிற வீரர்களால் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை

தடகள போட்டியில் பல  வருடங்கள் கழித்து, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவை சேர்ந்த நபர் பெற்ற முதல் தங்க பதக்கம் இதுவே. தனிநபர் பிரிவில் தங்கத்தை பெற்றுத்தந்த 2-ஆவது இந்தியர் என்ற பெருமை நீரஜ்-ஐ சாரும்.  காரணம் கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில், துப்பாக்கி சுடுதலில்  அபினவ் பிந்த்ரா என்பவர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இதுபோன்ற முக்கிய சாதனைகளை படைத்த நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த இமாலய வெற்றியை பாராட்டும் வகையில் தேசமே கொண்டாடி, நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் பலரும் போட்டிபோட்டுக்கொண்டு தங்களது பரிசுகளை வழங்கி வருகிறார்கள். கோடிகளில் நனையும்  நீரஜ்-ற்கு,  இவை அனைத்துமே அவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாகும்.

மாநிலங்களில் இருந்து கிடைக்கும் பரிசுகள்....!

** ஹரியாணா மாநில முதல்வர் எம்.எல்.கட்டார் அறிவித்திருப்பது, இம்மாநில விளையாட்டு கொள்கையின்படி ரொக்கப்பரிசாக 6 கோடி ரூபாயும், கிரேட் 1 அரசு வேலையும், குடியிருப்பு மனை ஒன்று குறைந்த விலையில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

** பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர்சிங் அறிவித்தது, இந்தியாவிற்காக பெருமை சேர்த்த சோப்ராவின் பெற்றோர்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என்பதால், அரசு சார்பாக ரூ.2 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

** மணிப்பூர் மாநில முதல்வர் என்.பிரேன் சிங் அறிவித்திருப்பதாவது, 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு தங்கம்  கிடைக்க வைத்த நீரஜ் சோப்ராவை பெருமை படுத்த முடிவு செய்துள்ளோம். அதனால் அவருக்கு ரொக்கமாக 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கவுள்ளது என அறிவித்துள்ளார்.


** இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 1 கோடி ரூபாயை ரொக்க பரிசாக அளிக்க உள்ளது.  

** இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ்  1 கோடி ரூபாயை பரிசாக வழங்க உள்ளது.நீரஜ்  ஈட்டி எரிந்த தூரத்தை குறிக்கும் வகையில் 8758 என்ற நம்பர்கள் பொரித்த ஜெர்சியை அவருக்கு வழங்க உள்ளது.

தனியார் நிறுவனங்கள் வழங்கும் பரிசுகள்.....!

** எலான் குழும தலைவர் ராகேஷ் கபூர் அறிவித்திருப்பதாவது, எங்களுடைய குழுமம் சார்பாக நீரஜ் சோப்ராவிற்கு 25 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.


** இவர்கள் வரிசையில் பிரபல விமான நிறுவனமான இன்டிகோ புதிய அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. அதாவது இன்று முதல், வரும் 2022-ஆம்  வருடம் ஆகஸ்ட்-7-ஆம் தேதி வரை, இண்டிகோ நிறுவனம் சார்ந்த விமானங்களில் நீரஜ் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்து கொள்ளலாம்

**இதையடுத்து  மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா-ம் அட்டகாசமான பரிசை நீரஜ்-ற்கு பரிசளிக்கவுள்ளார். அதாவது நீரஜ் இந்தியா திரும்பிய பின் அவருக்கு எக்ஸ்யுவி 700 வகை சொகுசு கார் ஒன்றை பரிசளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இவ்வளவு ஏராளமான பரிசுகளை சோப்ரா பெறுவதற்கு காரணம், ஒலிம்பிக் விளையாட்டுகளில்  சுமார் 13 வருடங்கள் தவித்திருந்த இந்தியாவின், வெற்றி என்ற தாகத்தை தணித்தது தான்.

More News

மாடலிங் செய்யும் 99 வயது பாட்டி? நெட்டிசன்ஸ் வியக்கும் அசத்தலான புகைப்படம்!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 99 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய பேத்தியின் பிசினஸ்க்காக மாடலிங் செய்ய துவங்கி இருக்கிறார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த அமெரிக்கா… இந்தியா பெற்ற இடம்…!

32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கடந்த ஜுலை 23 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வந்தது

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் நாயகி இவரா?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல்

கார்த்திக் சுப்புராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா' டிரைலர்!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான 'பூமிகா' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

பார்ஸிலோனாவில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி: வைரல் வீடியோ!

உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீரரான மெஸ்ஸி, கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி கொண்டிருந்த நிலையில் அந்த அணியில் இருந்து அவர் வெளியேறி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது