பூட்டியிருந்த வீட்டில் 200 சவரன் தங்கம் கொள்ளை… போலீசார் வலைவீச்சு!

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

ஒசூர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து மர்ம நபர்கள் 200 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி அடுத்த காரிமங்கலத்தை சார்ந்தவர் மாதையன். இவர் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தயாகம் திரும்பிய அவர் ஒசூர் பகுதியில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான காரிமங்கலத்திற்கு அவர் சென்ற நிலையில் பூட்டி இருந்த அவர் வீட்டின் கதவை யாரோ உடைத்துள்ளனர். இந்தத் தகவலை வேலைக்காரப் பெண் மாதையனுக்கு தெரிவிக்க உடனே விரைந்த அவர் 200 சவரன் தங்கம் மற்றும் ஒரு கிலோ அளவிற்கு வெள்ளிப் பொருட்கள் கொள்ளைப் போனதாக காவல் துறையில் புகார் தெரிவித்து உள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஒசூர் பகுதியில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரச் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பூட்டி இருந்த வீட்டில் 200 சவரன் தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் ஒசூர் பகுதியில் கடும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

More News

அவரை தவிர எனக்கு வெருயாருமில்ல: செல்முருகனின் உருக்கமான பதிவு

மறைந்த நடிகர் விவேக்கின் மேலாளரும் நடிகருமான செல்முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் காலமானது குறித்து பதிவு செய்துள்ள டுவீட்டில் அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை என பதிவு செய்துள்ளார். 

சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்து ஒரே சிஎஸ்கே பவுலர் இவர்தான்!

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்றைய 12வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. சென்னை அணியை பொருத்தவரை கடந்த போட்டியில்

வேலூர் பட்டாசு கடையில் விபத்து… 2 குழந்தைகளுடன் முதியவர் உயிரிழந்த சோகம்!

வேலூர் மாவட்டம் லத்தேரி எனும் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்தக் கடையில் இருந்த உரிமையாளர்

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

'வாத்தி கம்மிங்' பாடலுடன் தீபிகா படுகோன் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'வாத்தி கம்மிங்' பாடல் பின்னணியில் பதிவு செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது