வரலாறு காணாத விலையில் தங்கம்: ரூ.30 ஆயிரத்தை தாண்டியதால் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,September 04 2019]

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த நிலையில் இவ்வருட இறுதிக்குள் தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்தை தொட்டுவிடும் என்று நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதற்கு முன்னரே செப்டம்பர் மாதமே தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்தை தாண்டிவிட்டது

இந்திய பொருளாதார மந்த நிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்கா- சீனா இடையே வர்த்தகப்போர், பங்குச்சந்தை வீழ்ச்சி ஆகியவை காரணமாக தங்கத்தில் அதிக முதலீடு செய்யப்படுவதால் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் தாலிக்கு தங்கம் வாங்க கூட திண்டாடவேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதே நேரத்தில் தங்கத்தை சேமித்து வைத்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்றைய விலையை விட ரூ 288 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ 30,120 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இப்போதைய சூழ்நிலையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக நகை வியாபாரிகள் தெரிவித்திருப்பது நடுத்தர வர்க்க மக்களுக்கு உண்மையில் மிகப்பெரிய அதிர்ச்சியான செய்திதான்