குழப்பத்தில் கொரோனா: வந்தது தங்கத்தினால் ஆன மாஸ்க்
- IndiaGlitz, [Thursday,June 25 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி விட்டது என்பதும் தமிழகத்தில் 60 ஆயிரத்துக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உள்ளனர் என்பதும் தெரிந்ததே
இருப்பினும் கொரோனா வைரஸ் குறித்து பொது மக்களில் பலர் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க அணியும் மாஸ்க்கில் கூட மேட்சிங் பார்த்து சிலர் அணிவதாக தகவல்கள் செய்திகள் வெளியாகின. கடையில் மாஸ்க் வாங்கும்போது அணிந்திருக்கும் உடைக்கு மேட்சிங்கான மாஸ்க் பொதுமக்கள் வாங்கி வருவதாக மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் தற்போது தங்கத்திலான மாஸ்கும் வெளிவந்துள்ளது. விரைவில் திருமணம் செய்ய இருக்கும் ஒரு ஜோடிக்காக தங்கத்தினாலான மாஸ்க் செய்யப்பட்டிருப்பதாக அந்த மாஸ்க்கை செய்தவர் கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 3 கிராம், 4 கிராமில் 24 காரட் தங்கத்தில் இந்த மாஸ்க் செய்யப்பட்டிருப்பதாகவும் பின்னாளில் இந்த மாஸ்க்கில் உள்ள தங்கத்தை உருக்கி வேறு உபகரணங்கள் செய்து கொள்ளலாம் என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது
மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, இதுபோன்ற தங்கத்தினால் ஆன மாஸ்க்கை பார்த்தும் குழப்பம் அடைந்து இவ்வுலகை விட்டே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை