தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு!

  • IndiaGlitz, [Saturday,March 05 2022]

தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு கோகுல்ராஜ் என்ற கல்லூரி மாணவர் வேறு சமூகத்தை சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்தார். இந்த நிலையில் திடீரென 2015 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. அவரது உடல் ரயில் தண்டவாளம் அருகே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்த நிலையில் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் தான் கோகுல்ராஜை கொலை செய்தனர் என சுவாதி வாக்குமூலம் கொடுத்தார். ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது திடீரென அவர் தனது வாக்குமூலத்தை வாபஸ் பெற்றார். அதே போல் பல அரசு தரப்பு சாட்சிகளும் பிறழ்வாக்குமூலம் கொடுத்தனர். இதனையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து பல உண்மைகளை கண்டறிந்தனர். கோகுல்ராஜ் உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கோகுல்ராஜ் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிந்து மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோகுல்ராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. யுவராஜ் ,அருண், குமார், சங்கர், அருள், செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சதீஷ்குமார், ரஞ்சித், சந்திரசேகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் அவர்களுடைய தண்டனை விவரம் மார்ச் 8-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் வழக்கின் தீர்ப்பு வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.