கோட்சே தீவிரவாதியா? கொலைகாரனா? சுப்பிரமணியன் சுவாமி விளக்கம்
- IndiaGlitz, [Monday,May 13 2019]
உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கமல்ஹாசன் கூறியதுபோல் கோட்சே ஒரு தீவிரவாதி கிடையாது. மகாத்மா காந்தியை கொலை செய்த ஒரு கொலைகாரன். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சமுதாயத்தில் உள்ள மக்களை யார் அச்சுறுத்தும் வகையில் செயல்படுகின்றார்களோ அவர் தான் பயங்கரவாதி என ஐநா ஒரு வரைமுறையை வகுத்துள்ளது. இந்த வரைமுறையின்படி கோட்சே ஒரு கொலைகாரன், அவனால் சமுதாயத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் அவன் தீவிரவாதி கிடையாது என்று கூறினார்.
மேலும் கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும், என்ன பேச வேண்டும் என்றே அவருக்கு தெரியவில்லை என்றும் அவரது கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.