பிராமணர் சர்ச்சை, உச்சபட்ச ஆபாசம்: 'காட்மேன்' வெப்சீரீஸ் டீசர்!
- IndiaGlitz, [Tuesday,May 26 2020]
திரைப்படங்களுக்கு இருப்பது போல் வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் பெரும்பாலான வெப்சீரிஸ்களில் ஆபாசம், வன்முறை ஆகிய காட்சிகள் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்காக உருவாக்கப்பட்டுள்ள ’காட்மேன்’ என்ற வெப்சீரிஸ் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் பிராமணர் சமூகம் குறித்த சர்ச்சை காட்சிகள் மற்றும் உச்சபட்ச ஆபாச காட்சிகள் இருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பிராமணர் மட்டும் தான் வேதம் சாஸ்திரம் படிக்க வேண்டும் என எந்த சாஸ்திரமும் கூறியிருக்கிறது? ’
‘என்னைச் சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியர்களாக உள்ளனர்’.
’நீ வேதம் படிக்கும் பையனாக மாறப்போகிறாய் இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டப்போகிறேன்’
ஆகிய வசனங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிராமணராக மாறப்போகும் இளைஞராக டேனியல் பாலாஜி நடித்துள்ளார். இவருக்கும் ஒரு நடிகைக்கும் உள்ள காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாக உள்ளது.
மேலும் பிராமணர் சமூகம் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் இந்த வெப்சீரிஸ்க்கு இந்துமத அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த எதிர்ப்பு இந்த வெப்சீரீஸ்க்கு இலவச விளம்பரமாகவும் மாறலாம். ஆனால் அதே நேரத்தில் அனைத்து மதங்களிலும் தவறு நடக்கிறது என்றும், ஆனால் திரையுலகினர் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து ஆபாசமாக திரைப்படம் எடுக்கிறார்கள் என்றும் மற்ற மதங்களில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட யாருக்கும் தைரியமில்லை ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், உள்பட பலர் நடித்துள்ள இந்த ‘காட்மேன்’ வெப்சீரீஸை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். சதீஷ் இசையில் லக்ஷ்மண் குமார் ஒளிபதிவில் இந்த வெப்சீரீஸ் உருவாகியுள்ளது. இந்த சீரீஸ் வரும் ஜூன் 12 முதல் ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.