சர்ச்சைக்குரிய 'காட்மேன்' டீசர் திடீர் நீக்கம்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,May 30 2020]

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்த ’காட்மேன்’ வெப்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஜீ5 நிறுவனம் தயாரித்த இந்த வெப்தொடரின் டீசர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வெப்தொடரின் டீசரில் அதிகபட்ச ஆபாச காட்சிகள் இருந்ததாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்து மதத்தை இந்த வெப்தொடர் இழிவுபடுத்துவதாக இந்துமத அமைப்புகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் பல்வேறு திசைகளிலிருந்து இந்த வெப்தொடருக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து யூட்யூப்பில் இருந்து ’காட்மேன்’ டீசரை ஜீ5 நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

இருப்பினும் இந்த வெப்தொடர் திட்டமிட்டபடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும், இந்த தொடரில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் புதியதாக வேறு ஒரு டீசர் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ’காட்மேன்’ வெப்தொடர் டீசர் நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.