திட்டமிட்டபடி காட்மேன் தொடர் வெளியாகுமா? ஜீ நிறுவனம் அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,June 01 2020]

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் நடிப்பில் உருவான ’காட்மேன்’ வெப்தொடர் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இந்த தொடர் வெளியிடுவது குறித்த அறிவிப்பு ஒன்றை ஜீ நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான காட்மேன் வெப்தொடரின் டீசரில் அளவுக்கு அதிகமான ஆபாச காட்சிகள் இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் மதத்தையும் இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார்களின் அடிப்படையில் காட்மேன் வெப்தொடரின் இயக்குநர் பாபுயோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் காட்மேன் வெப்தொடரில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த தொடரில் சம்பந்தப்பட்ட அனைவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்ப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் வரும் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த காட்மேன் தொடர் வெளியாகாது என்று ஜீ நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த தொடரின் வழக்குகள் குறித்த பிரச்சனை முடிந்த பின்னரே இந்த தொடர் வெளியாகும் என கூறப்படுகிறது.
 

More News

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? பள்ளிகல்வி​த்துறை இயக்குநரின் அதிரடி உத்தரவு

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பாடகி சுசித்ராவின் அடுத்த வீடியோ: இணையதளங்களில் வைரல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ரா 'சுசுலீக்ஸ்' என்ற பெயரில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒருசில சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு

முதல்முறையாக டபுள் ஆக்சனில் தனுஷ் பாடலுக்கு நடனமாடும் வார்னர்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த கொரோனா விடுமுறையில் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களின் பாடல்களுக்கு நடனமாடி அதுகுறித்த வீடியோக்களை

பைக்கை திருடி சொந்த ஊருக்கு சென்றவுடன் பைக்கை கொரியரில் அனுப்பிய நபர்

கோவையில் உள்ள ஒரு நபர் பைக்கை திருடி, தனது குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு சென்ற பின், பைக்கை அதன் உரிமையாளருக்கு கொரியரில் அனுப்பி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையை நோக்கி நகரும் சிகப்பு தக்காளிகள்: செம மழை பெய்யும் என வெதர்மேன் தகவல்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று முதல் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்