அஜித் படக்குழுவினரால் தாமதமாகும் சிரஞ்சீவி படம்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தால் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாக தகவல் வெளிவந்துள்ளது.

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் ரஷ்யாவில் 5 நாள் ஆக்ஷன் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியது இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்தது. அந்த வகையில் தற்போது அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் ரஷ்யா கிளம்பி விட்டதாக தெரிகிறது. மேலும் தல அஜித் விமான நிலையத்தில் ரஷ்யா கிளம்புவதற்காக தயாராக இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சிரஞ்சீவி நடிக்கவுள்ள ’காட்பாதர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருந்தது. ஆனால் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா தான் ’வலிமை’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதால், அவர் ரஷ்யா சென்றுவிட்டதால், திட்டமிட்டபடி ’காட்பாதர்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றும் நீரவ்ஷா ’வலிமை’ படத்தை முடித்துவிட்டு திரும்பி வந்ததும், ’காட்பாதர்’ படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 

’வலிமை’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பியதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான போஸ்டர் ஒன்று ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.