ராம்கோபால்வர்மாவின் 'God Sex and Truth' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா நடித்த 'God Sex and Truth' என்ற வெப் திரைப்படத்தின் கவர்ச்சியான ஸ்டில்கள் மற்றும் தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த படம் வெளியாகும் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் வரும் 26ஆம் தேதி காலை 9மணிக்கு வெளியாகும் என்று ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதற்கு முந்தைய நாளில் தான் தீபிகா படுகோனேவின் 'பத்மாவத்' திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராம்கோபால் வர்மா தனது டுவீட்டில் மியாமால்கோவா மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் சிறந்த பெண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்

GST என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த படம் ரிலீசுக்கு முன்னரே பெரும் சர்ச்சைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் ரிலீசுக்கு பின்னர் என்னென்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நாம் உயிருடன் இருக்க எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் தான் காரணம்: மிஷ்கின்

இயக்குனர்கள் மிஷ்கின், ராம் நடிப்பில் இயக்குநர் G.R. ஆதித்யா இயக்கிய 'சவரக்கத்தி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது ஆபாச விமர்சனம். நித்தியானந்தா ஆசிரமம் மீது புகார்

சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கவிஞர் வைரமுத்து மீது குற்றஞ்சாட்டிய நிலையில் அவரையும் அவரது குடும்பத்தினர்களையும் ஒருசிலர் தரக்குறைவாக விமர்சனம் செய்தனர்.

'தானா சேர்ந்த கூட்டம்' டப்பிங் குறித்து சுரேஷ்மேனன் அதிருப்தி

சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சூர்யாவை அடுத்து இந்த படத்தில் பாராட்டுக்களை பெற்றவர் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த சுரேஷ்மேனன்

பிரியதர்ஷன் - உதயநிதியின் 'நிமிர்': திரை முன்னோட்டம்

இயக்குனர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'நிமிர்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்

ஒரே ஆதார் எண்ணில் 9 மொபைல் போன்கள் இணைப்பு! அதிர்ச்சி தகவல்

ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அந்த தகவல்கள் பலவிதமாக கசிவதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்